விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம் நிவாரணம்? கள்ளச்சாரயம் விற்பனை செய்தவர்களிடம் பணம் வாங்கி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறிய அவர், ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் இபிஎஸ் கோடநாடு கொலைக்கு பதவி விலகி இருக்க வேண்டும் என்றும் சாடினார்.