தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவிமோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவித்து விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே, இவர்களது பிரிவுக்குப் பின்னணி பாடகி கெனிஷாதான் காரணம் என சோசியல் மீடியாவில் எழுந்த விமர்சனங்களுக்கு, “இனி என்னைச் சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன், விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப் போவது கிடையாது” என ரவிமோகன் தனது ஸ்டுடியோவில் கண்ணீர் மல்க ஆர்த்தி குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேட்டியளித்திருந்தார்.
”என்னால் நிம்மதியாக நடிக்க முடியவில்லை, என் பிள்ளைகளைப் பார்க்கக் கூட என்னை விடமாட்டேன் என்கிறார்கள்” என்று ஆக்ரோஷமாகப் பேசிய ரவிமோகன், தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ரவிமோகன் தற்போது சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, கடுமையான விரதத்தைத் தொடங்கியுள்ளார். அவர் சொன்னது போலவே, சென்னை மற்றும் சினிமா உலகை விட்டு முற்றிலும் விலகி ஆன்மிகப் பயணத்தில் இறங்கியுள்ளது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
