சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குரங்கு ஒன்று யாருமே இல்லாத வீட்டிற்குள் தந்திரமாக நுழைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக குரங்குகள் உணவைத் தேடி வீட்டின் மேற்கூரையில் அல்லது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம்.

ஆனால், இந்த வீடியோவில் உள்ள குரங்கு, ஒரு மனிதனைப் போலவே மிகவும் லாவகமாக சமையலறைக்குச் சென்று அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை  தானாகவே திறந்து, தனக்கு வேண்டிய உணவுப் பொருட்களைத் தேடி எடுத்துள்ளது. அதன் புத்திசாலித்தனத்தையும், சற்றும் பயமின்றி அது நடந்து கொண்ட விதத்தையும் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

“>

இந்த வீடியோ மற்றும் ‘லோக் சத்தா’ போன்ற தளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. குளிர்சாதனப் பெட்டியைத் திறப்பது மட்டுமல்லாமல், தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு எவ்வித சேதமும் விளைவிக்காமல் அது வெளியேறியது பலரையும் கவர்ந்துள்ளது.

மேலும் வனப்பகுதிகள் குறைந்து வருவதால், உணவிற்காக விலங்குகள் ஊருக்குள் புகுவது ஒருபுறம் கவலையை ஏற்படுத்தினாலும், இந்தக் குரங்கின் சேட்டை கலந்த வீடியோ தற்போது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இந்த சுவாரசியமான வீடியோவை லட்சக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.