தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகையாக வலம் வந்தவர் வாசுகி. இவர் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காரைக்குடியை பூர்விகமாகக் கொண்டவர். ஆனால் தற்போது அவர் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுவதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதாவது நடிகை சகிலா வாசுகியிடம் பேட்டி எடுத்தார். அப்போது அவர் எங்கு வாய்ப்பு தேடி சென்றாலும் செக்யூரிட்டியை வைத்து விரட்டுகிறார்கள். இது தொடர்பாக நடிகர் சங்கத்திடம் முறையிட்டுள்ளேன். அவர்கள் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா ஆகியோகிர் கூட உதவி செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் அங்கு சென்றாலே செக்யூரிட்டியை வைத்து விரட்டுகிறார்கள். நான் விஜயகாந்த் இறந்த செய்தியை கேட்டு உடனடியாக கடன் வாங்கிக் கொண்டு வந்தேன்.

அந்த சமயத்தில் பிரேமலதா உதவி செய்வதாக கூறினார்கள். நான் அவரிடம் உதவி செய்யுமாறு கேட்டபோது ஏதேனும் வேலை செய்யலாமே என்று கேட்டார். அதன்பின் ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் கொடுத்து செல்போன் நம்பரை வாங்கிவிட்டு அங்கிருந்து என்னை அனுப்பி விட்டனர். சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். என்னுடைய அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். என் அம்மாவுக்கு கேன்சர். என் கணவரும் சரி கிடையாது. என்னை விட்டு சென்றுவிட்டார். என் தங்கையின் திருமணத்தையும் நான்தான் நடத்தினேன். இதனால் தற்போது சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் யாரேனும் உதவி செய்தால் நிச்சயம் ஏதாவது ஒரு வேலை  பார்த்து பிழைத்துக் கொள்வேன் என்றும் கூறினார்.