கேரள மாநிலம் நெல்லிக்கட்டாவை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அப்துலுக்கும் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு வரதட்சனை கேட்டு அப்துலின் தாய் மருமகளை கொடுமைப்படுத்தி வந்தார். துபாயில் இருந்து மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அப்துலும் அடிக்கடி வரதட்சணை பற்றி கேட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் எனது கணவரின் தாயும், சகோதரியும் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்துகின்றனர். வரதட்சணையாக 50 சவரன் தங்க நகை கேட்டனர். திருமணத்தன்று எனது தந்தையால் 20 சவரன் மட்டுமே கொடுக்க முடிந்தது. இதனால் எனது மாமியார் என்னை சித்திரவதை செய்கிறார். உணவு இல்லாமல் ஒரு அறையில் அடைத்து வைத்து மனரீதியாக சித்தரவதை செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.