வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான் பட்டறை பகுதியில் ‌ அப்துல் கனி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் கடந்த வருடம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதாவது வெளியே விளையாடிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரின் 7 வயது மகளிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். பின்னர் சைக்கிளில் வைத்து மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு பலாத்காரம் செய்யவும் முயற்சித்தார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அப்துல் கனியை பிடித்தனர். அவரை வேலூர் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றவாளிக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 வருடங்கள் சிறை தண்டனையும், போக்சோ பிரிவின் கீழ் 20 வருடங்கள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.