இந்தியாவில் காரசார உணவுகளுக்கு தனி இடம் உண்டு. பல மாநிலங்களில், மிளகாயில்லாமல் உணவு சமைக்கவே முடியாது. சிலர் அதை பச்சையாகவே சாப்பிடுவதும் சகஜம். ஆனால் இப்போது, ஒரு சிறுவன் பச்சை மிளகாயை மிகவும் இயல்பாகச் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு சிறு வயது குழந்தை, தனது முன் வைக்கப்பட்டுள்ள ஒரு தட்டில் அரிசி, பருப்பு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயுடன் அமர்ந்திருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்தது போல, மிளகாயை பிடித்து உடைத்துவிடுவாரோ, அல்லது ஒரு கடி வாங்கியவுடன் அழத் தொடங்குவாரோ என்று எண்ணிய தருணத்தில், குழந்தை எந்த தயக்கமும் இன்றி மிளகாயை நேரடியாக வாயில் போட்டு மென்று சாப்பிடத் தொடங்குகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Elsa Kunama Queen (@elsakunamaqueen)

முழுக்க முழுக்க சாந்தமாக, வேறு உணவுப் பொருளை சாப்பிடுவது போலவே பமிளகாயை உண்கிறார். குழந்தையின் இந்த தைரியமான மற்றும் அப்பாவியான செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த காணொளி Instagram தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 36 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை பலரும் தங்கள் நகைச்சுவையூட்டும் மற்றும் கவலையூட்டும் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.