
நாடு முழுவதும் நேற்று பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்திலும் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கர்ஹால் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பெண்ணின் தாயார் தன் மகள் சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன் என்று கூறியதால் கற்பழித்து கொலை செய்துவிட்டதாக பரபரப்பு புகாரினை தெரிவித்துள்ளார்.
அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் சாக்கு மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தாய் கூறியுள்ளார். அதன் பிறகு சமாஜ்வாதி கட்சியினர் தங்கள் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறியதாகவும் தாங்கள் அதற்கு மறுத்து பாஜகவுக்கு ஓட்டு போட்டதால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தங்களை மூரட்டியதாகவும் அந்த பெண்ணின் தாயார் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி இன்னும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.