பெங்களூர் அருகே மாஜோஹல்லி பகுதியில் கண்ணையா லால் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு முகமூடி அணிந்து கடைக்குள் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் கண்ணையா மற்றும் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்க நகைகளை எடுத்து போடுங்கள்.
அப்படி இல்லை என்றால் சுட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அவர்கள் கொண்டு வந்த சாக்கு பையில் ஊழியர்கள் நகைகளை அள்ளிப் போட்டனர். இதற்கிடையே அச்சத்தில் கண்ணையா காப்பாற்றுங்கள் திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த மர்ம நபர்கள் அங்கு நின்றால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் கையில் கிடைத்த நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை மக்கள் பிடிக்க முயன்ற போதும் ஒரு காரில் தப்பி சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் 184 கிராம் தங்க நகைகளை அவர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
