வழக்கமான திருமண விழா போலவே, மணமக்கள், விருந்தினர், வேத மந்திரங்கள் என அனைவரும் கூடி, வீதியில்  பாரம்பரிய முறையில் திருமண விழா நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால் அந்த விழாவின் மணமக்கள் யாரென்று தெரியாமல் இருந்தது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. பின்னர் தெரிய வந்தது உண்மையை அறிந்தோர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த “மணமக்கள்” வேறு யாரும் இல்லை… இரு ரயில் தடங்கள்!

இந்த விசித்திரமான திருமண நிகழ்ச்சி எந்த மாநிலத்தில் நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்த பகுதி மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில், ரயில் தடங்களில் விபத்துகள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு ரயில்வே பாதைகளுக்கிடையில் பூமாலை சூட்டி, வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு, பாரம்பரிய முறையில் திருமணம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை வீடியோவாக பதிவு செய்தவர்கள், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் சில மணி நேரத்திலேயே மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றது.

“>

 

இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், “இதெல்லாம் வேடிக்கை” என நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மற்றவர்கள், “பழம்பெரும் நம்பிக்கைகள், விபத்துகள் தவிர்க்கும் நற்செயலாக” இது ஒரு ஆன்மிக பாரம்பரிய நிகழ்வாக உள்ளது எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இருசட்ட தடங்களுக்கு பூமாலை சூட்டி, மனிதர்களைப் போல ஆசீர்வதித்தும் விட்டுள்ளனர் என்பதும் வீடியோவில் ஹைலைட் ஆகும் தருணமாக மாறியுள்ளது. சம்பவம் நம்மை சிரிக்கவைக்கும் அளவுக்கு இருந்தாலும், அதன் பின்னுள்ள நோக்கம் மக்களது பிரார்த்தனையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகின்றது.