மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாலி வாடா பகுதியில் தீபாலி என்ற 19 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனில் (22) என்ற வாலிபருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 24ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளில் வெளியே கிளம்பினர்.

அப்போது ஒரு மறைவான இடத்திற்கு திடீரென சுனில் வண்டியை நிறுத்தி அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதைத் தொடர்ந்து இளம் பெண் வாலிபரிடம் எனக்கு நீ ஒரு லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லை எனில் இந்த விஷயத்தை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோவத்தை அங்கிருந்த ஒரு கல்லை எடுத்த இளம் பெண்ணின் தலையில் வாலிபர் அடித்தார். இதில் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பின்னர் வனப்பகுதியில் அந்த இளம் பெண்ணின் சடலத்தை வீசிவிட்டார்.

இந்நிலையில் நேற்று சுனில் தானாகவே போலீஸ் ஸ்டேஷனில் சென்று சரணடைந்து நடந்த விவரங்களை கூறினார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.