கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள ஒரு சலூனில் அரங்கேறிய சுவாரஸ்யமான சம்பவம் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தேவ் சலூன் என்ற கடைக்கு தினமும் ஒரு குரங்கு வந்து கண்ணாடியின் முன் அமர்ந்து தன்னைத்தானே ரசிப்பதை வழக்கமாக வைத்திருந்தது. முதலில் கடை உரிமையாளர் தேவராஜ் அதனை விரட்ட முயன்றாலும், அந்த ‘ஸ்பெஷல் கெஸ்ட்’ அங்கிருந்து நகரவே இல்லை.

வியாழக்கிழமை அன்று அந்த குரங்கு மீண்டும் கடைக்கு வந்தபோது, உரிமையாளர் தேவராஜ் அதனை விரட்டாமல் வேடிக்கையாக அதன் தலைமுடியை சீவ ஆரம்பித்தார்.

மனிதர்களைப் போலவே அந்த குரங்கும் அமைதியாகத் தலையைக் குனிந்து ஹேர் கட் செய்ய ஒத்துழைத்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒரு வாடிக்கையாளர் இந்த க்யூட் வீடியோவை தனது செல்போனில் படம்பிடிக்க, தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான இந்த அழகான பிணைப்பு சாமராஜநகர் பகுதியில் இப்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.