சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களில் மாதந்தோறும் ஒன்று முதல் 22ஆம் தேதி வரை விருப்பம் போல் பயணம் செய்வதற்கு ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 13 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையின் காரணமாக பயணிகளுடைய நலன் கருதி மாதாந்திர சலுகை, மாணவர் சலுகை அட்டை மற்றும் ஆயிரம் மதிப்பிலான பயண அட்டைகளுடைய விற்பனை கூடுதலாக ஒரு நாள் நீடிக்கப்பட்டு ஜனவரி 23ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.