ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தையே உலுக்கிக் கொண்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் ஈரான் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

“எதிரி நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையின்றிச் செல்லலாம்” என்று ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இங்கு நிலவிய தடையால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக எகிறியது.

இப்போது ஈரான் வழிவிட்டுள்ளதால் உலக நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன.ஈரானுடன் நேரடிப் போரில் ஈடுபட்டுள்ள அல்லது ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள குறிப்பிட்ட ‘எதிரி’ நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் இன்னும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது கடல் எல்லையைப் பாதுகாக்கும் அதே வேளையில், சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்க விரும்பவில்லை என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளது.