தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுபட்டபோது திராவிட நல் திருநாடு என்ற வரி பாடாமல் விட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ள நிலையில் சென்னை ஆலந்தூர் பரங்கிமலை பகுதிகளில் ஆளுநரை கண்டித்து சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.