
ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சருமான பிரவதி பரிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாதவிடாய் சுற்றில் முதல் அல்லது இரண்டாவது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த மாதவிடாய் கால விடுமுறையை எடுத்துக் கொள்வது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கேரளா மற்றும் பிஹார் மாநிலத்தில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ள நிலையில் மூன்றாவது மாநிலமாக ஒடிசாவும் மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளது.