சமூக வலைதளங்களில் வினோதமான சமையல் பரிசோதனைகள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது பெண் ஒருவர் பாப்கார்னை வைத்து ‘பாப்கார்ன் கறி’ தயாரிக்கும் வீடியோ இணையவாசிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக சினிமா பார்க்கும்போதும் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் ரசித்து உண்ணப்படும் பாப்கான்னை, மசாலாக்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து ஒரு குழம்பு போல அந்தப் பெண் சமைத்துள்ளார்.

மேலும் முதலில் பாப்கான்னைத் தயார் செய்துவிட்டு, பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய், வெங்காயம், தக்காளி, தயிர் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து ஒரு கிரேவி போன்ற கலவையை உருவாக்கி, இறுதியில் அதில் பாப்கார்னைப் போட்டுக் கிளறி இந்தப் புதிய உணவை அவர் உருவாக்கியுள்ளார். வினோதமான செய்முறையைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Suguna.B (@suguna_cooking_channel)

“>

இந்த பாப்கார்னின் மொறுமொறுப்பான தன்மையை இது போன்ற குழம்பில் சேர்த்து அழிப்பது தேவையற்றது என்றும், சமையல் என்ற பெயரில் இது போன்ற சோதனைகள் உணவின் சுவையைக் கெடுப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், வீடியோவின் இறுதியில் அந்தப் பெண் அந்த உணவை மிகவும் ரசித்து உண்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் வித்தியாசமான உணவுகளை முயற்சிப்பவர்களுக்கு இது ஆர்வத்தைத் தந்தாலும், பாரம்பரிய உணவுப் பிரியர்களுக்கு இந்த ‘பாப்கார்ன் கறி’ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.