சபாநாயகர் பதவியேற்பு விழாவின் போது, அந்தப் பதவி உருவான விதம் குறித்து முதலமைச்சர் விஜய் ஒரு சுவாரஸ்யமான மற்றும் சற்றே அதிரடியான ‘குட்டி’ வரலாற்றைப் பகிர்ந்து கொண்டார். முன்னொரு காலத்தில் பிரிட்டனில் மன்னர் ஒரு பணியைச் செய்ய விரும்பி, அதனை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தால், அந்தச் செய்தியை மன்னரிடம் கொண்டு செல்லும் பொறுப்பு சபாநாயகருக்கே (ஸ்பீக்கர்) இருந்தது. ஆனால், யாருக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னரிடம் இருந்ததால், பிடிக்காத செய்தியைச் சொல்லும் சபாநாயகரின் தலையை வெட்ட மன்னர் ஆணையிட வாய்ப்பிருந்தது என விஜய் விளக்கினார்.
சபாநாயகர அமர வைக்கும் மரபு எப்படி வந்தது தெரியுமா? முதலமைச்சர் விஜய் சொன்ன சுவாரஸ்ய வரலாறு#TNAssembly | #Vijay | #JCDPrabhakar | #KuttyStory pic.twitter.com/E5vPSIHZ4L
— PttvOnlinenews (@PttvNewsX) May 12, 2026
இப்படிப் பலமுறை சபாநாயகர்களின் தலை வெட்டப்பட்டதால், அந்தப் பதவிக்கு அறிவிக்கப்படுபவர்கள் ‘தலை தப்பித்தால் போதும்’ எனப் பயந்து ஓடும் நிலை இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவர்களைத் தடுத்து, கைகளைப் பிடித்து இழுத்து வந்து வலுக்கட்டாயமாக ஆசனத்தில் அமர வைப்பார்கள். அந்தப் பழைய மரபுதான் இன்றும் மரியாதைக்குரிய சபாநாயகர் பதவியேற்பின் போது தொடர்கிறது என விஜய் கூறி அவையில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். சரித்திரத்தின் ஒரு பக்கத்தை இன்றைய அரசியல் மரபுடன் இணைத்துப் பேசிய முதலமைச்சரின் இந்த உரை தற்போது வைரலாகி
