உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “சனாதன தர்மத்தைத் தொட்டால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும்.

எந்த தனிக்கட்சியும் சந்திக்காத தோல்வியை I.N.D.I.A கூட்டணி சந்திக்கும்” என தெரிவித்துள்ளது. மேலும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சனாதன தர்மம் தொடர்பான எந்த சர்ச்சையிலும் சிக்க காங்கிரஸ் தயாராக இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.