
சனாதனம் என்ற ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தான் தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்காமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் இருக்கிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார் சொன்னதை தான் நானும் சொன்னேன். அமித்ஷா முதல் நட்டா வரை நான் பேசியதை தெரிவித்து பொய் செய்தியாக பரப்புகிறார்கள். சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார்.