
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசியில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக கோகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் மாரியப்பனின் நடத்தையில் கோகிலாவுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோகிலா தன் கணவனின் முதுகில் கத்தியால் குத்திய நிலையில் அவர் பலத்த காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.