தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (23), பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்காக வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக்குமார், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

மாணவி பயத்தில் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து கார்த்திக்குமார் தப்பி ஓடிவிட்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மாணவியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த கார்த்திக்குமாரைக் கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.