சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சதம் விளாசி சாதனை படைத்த இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா, ஆன்மீக வழிபாட்டிற்காக மதுரா மற்றும் விருந்தாவனில் உள்ள புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோவிலுக்குச் சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
மேலும் அவர் கோவில் வாசலில் விட்டுச் சென்ற காலணிகள் மாயமாகியிருந்தன. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கைக்குரிய வீரராகப் பார்க்கப்படும் ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Abhishek Sharma and his mother’s slippers were stolen at Govind Dev Ji Temple in Jaipur when they had gone for darshan. 😭
They searched for about 10–15 minutes, and later the temple administration provided them with new slippers. pic.twitter.com/Un0SGZIph6
— Sonu (@Cricket_live247) April 25, 2026
“>
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், தனது காலணிகளைத் தேடிவிட்டு, இறுதியில் வேறு வழியின்றி வெறும் கால்களுடன் அபிஷேக் சர்மா நடந்து செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், “விருந்தாவன் கோவிலில் இது சாதாரணமான விஷயம் தான்” என்று ஒருபுறம் கூறினாலும், மறுபுறம் ஒரு சர்வதேச வீரருக்கே இந்த கதி ஏற்பட்டதை நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
