தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகனான ஜோ விஷ்வா (14), ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டிலேயே இருந்த விஷ்வாவுக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த தாய், விஷ்வாவை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஷ்வா, வீட்டின் பின்பக்க அறைக்கு சென்று தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சம்பவத்துக்குப் பிறகு தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விஷ்வா தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.