மாப்பிள்ளை ஒருவர் மணப்பெண்ணின் காலில் விழுந்து அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை எடுத்துரைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருமணம் என்றாலே அனைவருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.  தற்போது திருமணங்கள் பலவும் மிக நகைச்சுவையாகவே அரங்கேறி வருகிறது.

குறிப்பாக சிலருடைய திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்று வருகிறார்கள். அந்த வகையில் மணப்பெண் மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்கையும், மரியாதையும் கொடுக்கிறார். இதற்கு பதிலாக மாப்பிள்ளை மணப்பெண்ணின் காலில் விழுந்துள்ளார். அதாவது ஆண் பெண் வேறுபாடு இல்லை எல்லாரும் சமம் என்பதை நிரூபித்துள்ளார்.