
கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றி மலையில் தனியாருக்கு சொந்தமான பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென பேருந்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே அங்கிருந்தவர்கள் பேருந்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.
ஆனாலும் ரவி என்ற ஒரு பணியாளர் மட்டும் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டார். அவர் வெளியேற முயன்ற போது கதவு பூட்டி கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.