
தமிழக மக்கள் பலரும் தற்போது ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாக செலுத்தி வருகின்றனர். குறிப்பாக பலரும் மின்கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தி வரும் நிலையில் ஒரு சில காரணங்களால் மக்கள் மின் கட்டணத்தை நேரில் சென்று கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். என் நிலையில் அவர்களின் வசதிக்காக தற்போது மின்சார அலுவலகங்களில் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் வகையில் pos இயந்திரங்களை பயன்படுத்தும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வசதி சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கோவையில் இந்த வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் இந்த வசதி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.