இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மையம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலிருந்து கொண்டே மக்கள் அனைத்து கட்டணங்களையும் செல்போன் மூலமாக கட்ட ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக மின்கட்டணத்தை எடுத்துக்கொண்டால் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலேயே செலுத்தி விடுவார்கள். மற்றவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று செலுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி வங்கி பணப்பரிமாற்றம் அதிகம் நடைபெறும் நிலையில் வாடிக்கையாளர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இதனால் அவர்களும் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக சென்று கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.

தற்போது டெபிட் கார்டுகளை ஸவைப் செய்யும் ஸ்வைப் மிஷின்களின் பயன்பாடு மின்வாரிய அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் மின்வாரிய அலுவலகங்களில் ஸ்வைப் மிஷின்களை பயன்படுத்தும் முடிவிற்கு வந்துள்ளனர். அதன்படி கோவை மன்றாட்டுக்குட்ட பகுதிகளில் மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணத்தை வசூலிக்க ஸ்வைப்பிங் மிஷின்களை பயன்படுத்தலாம். இருப்பினும் கலெக்ஷன் கவுண்டர் அல்லது ஒரே இடத்தில் பல கலெக்ஷன் கவுண்டர்கள் என இரண்டில் எப்படி இருந்தாலும் ஒரே ஒரு ஸ்வைப்பிங் மிசின் தான் தற்போதைக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்வைப்பிங் மெஷின் சேவை தடையற்ற முறையில் வழங்கும் விதமாக தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.