நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் பின் தங்கியுள்ள நிலையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முதல் சுற்று எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.