திருவாரூர் மாவட்டம் கருணாவூர் கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் பிரசாந்த். இவர்கள் இருவரும் ஒரு கோவில் திருவிழாவிற்கு நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அதாவது பச்சகுளம் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். இவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த ஒரு மரத்தின் மீது மோதினர்.

இந்த கோர விபத்தில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு பலத்த காயங்களுடன் மனோஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக தேவங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.