ஹரியானா மாநிலம் குருகிராமில் வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றும் விஷால் என்பவர், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, இஸ்கான் கோவிலுக்குச் செல்ல காரை முன்பதிவு செய்த பயணி ஒருவர், திடீரென “உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?” என விஷாலுக்கு ஆபாசமான முறையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விஷால், உடனடியாக அவரது கோரிக்கையை நிராகரித்த நிலையில், அந்த நபர் மன்னிப்பு கேட்டுவிட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.
View this post on Instagram
இதுகுறித்து வேதனையுடன் பேசியுள்ள விஷால், “இதற்கு முன்பு ரேபிடோ பைக் ஓட்டுநர்களுக்கு மட்டுமே இது போன்ற தொல்லைகள் இருந்து வந்தன; ஆனால் தற்போது கார் ஓட்டுநர்களுக்கும் இது போன்ற ஆபாசச் சங்கடங்கள் நேர்வது மிகுந்த வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
