யானை என்றாலே முதலில் நம்முடைய நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால் என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கு சுட்டித்தனமாக இருக்கும் குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் ஒரு சில நேரங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து வருகின்றன. அதேபோல் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் கமசாவில் உள்ள புனித பாஸ்வநாத் கோயிலில் யானை ஒன்று உள்ளே புகுந்தது. கோவிலில் புகுந்த யானை திடீரென்று கோவிலில் இருந்த தெய்வ சிலைகளை பார்த்து மண்டியிட்டு வணங்கியது.

பின் தன்னுடைய தும்பிக்கையை உயர்த்தி சாமி சிலையை பார்த்து பக்தியோடு கும்பிட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நல்ல யானையாக உள்ளது. இதை என்னால் நம்பவே முடியவில்லையே யானைக்கு இப்படி ஒரு பக்தியா என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.