இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்தபோது, பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர் ஒருவர் கோலியின் கால்களைத் தொட்டு வணங்கினார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வெளியேற்றிய நிலையில், அந்த ரசிகர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
WATCH | Fan invades pitch, ends up at Virat Kohli’s feet during IND vs SA.#IndiavsSouthAfrica #ViratKohli #Cricket pic.twitter.com/iB82lOQH2Q
— The Tatva (@thetatvaindia) December 1, 2025
“>
இந்நிலையில், அந்த ரசிகர், “போலீசார் என்னை ஒரு நிலையத்தில் அடைத்து வைத்திருந்தனர். ஆனால், விராட் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன்” என்று கூறியதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தச் சம்பவம், மைதானத்தில் விதிகளை மீறிய ரசிகர் மீது கோலி காட்டிய பாசத்தையும், மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
