விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது அதன் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த தாமதத்தால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும், ஒரு திரைப்படம் உருவாவதற்குப் பின்னால் பலருடைய உழைப்பும் பணமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.இருப்பினும், இது தளபதியின் கடைசி படம் என்பதால் எப்போது வெளியானாலும் ரசிகர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதைக் கொண்டாடுவார்கள் என்றும், படம் ரிலீஸாகும் போது திரையரங்கிற்குச் செல்வேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
