இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சினேகா மற்றும் லைலா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘உன்னை நினைத்து’. ஆனால், இந்தப் படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானவர் நடிகர் விஜய். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நாட்கள் படமாக்கப்பட்ட பிறகு, சில காரணங்களால் விஜய் அந்தத் திரைப்படத்திலிருந்து விலகினார். அதன் பின்னரே சூர்யா அந்த வாய்ப்பைப் பெற்று, அவரது திரைப்பயணத்தில் அது ஒரு முக்கியத் திரைப்படமாக அமைந்தது.

​தற்போது இந்தப் படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘என்னை தாலாட்டும் சங்கீதம்’ பாடலில் விஜய் மற்றும் லைலா நடித்திருந்த இதுவரை வெளிவராத வீடியோ காட்சிகளை இயக்குநர் விக்ரமன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளாக ஒரு தகவலாக மட்டுமே இருந்த இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.