நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று காலை முதல் மாலை வரை கொல்லிமலை சோளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர்.

நேற்று குளு குளு சீசன் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் அருவியில் நீர்வரத்து இல்லாததால் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடும் குளிர் நிலவியதால் சாலையோர கடைகள், உணவகங்களில் விற்பனை களை கட்டியதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.