மத்திய பிரதேச மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மத்திய பிரதேசம் மாநிலம் கொல்கத்தாவில் ஒரு கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அப்படி எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மேலாண்மை கழகம் (IIM-Calcutta) கல்லூரி மாணவியை ஹாஸ்டலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்பாக எழுந்த புகாரில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து முதலில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மாணவியின் தந்தை  தன் மகள் கூறிய விவரங்களை மறுத்துள்ளார். “என் மகளுக்கு எந்தவிதமான பாலியல் தொல்லையும் ஏற்படவில்லை. அவள் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மயக்கம் அடைந்ததுதான் நடந்தது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “வெள்ளிக்கிழமை இரவு 9:34 மணிக்கு எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் என் மகள் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து உணர்விழந்துவிட்டதாகவும், போலீசார் மீட்டு SSKM மருத்துவமனையின் நியூராலஜி வார்டில் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டது. மருத்துவமனையில் என் மகளிடம் பேசியபோது, அவள் எதுவும் நடந்ததில்லை என்றும், போலீசார் அவரை மருத்துவ பரிசோதனை செய்யும்போது எதையாவது சொல்லச் சொன்னதாகவும் கூறினாள்” எனத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “அவள் தற்போது நலமாக இருக்கிறாள். தூங்கிக் கொண்டிருக்கிறாள். விழித்த பிறகு மேலும் பேசுவேன். அவர் கூறுகையில், அந்த மாணவருடன் அவளுக்கு எந்த தொடர்பும் இல்லை” எனவும் கூறினார்.

முன்னதாக, மாணவி ஹாஸ்டலுக்கு “கவுன்சிலிங் செஷன்” என்ற பெயரில் அழைக்கப்பட்டு, மயக்கமருந்து கலந்த பானம் குடித்து மயங்கினார். விழித்த பிறகு தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கவனித்ததாகவும், குற்றவாளி மிரட்டியதாகவும் FIR-ல் தெரிவித்ததாகவும் போலீசார் கூறியதாக செய்தி வெளியானது. இந்தக் கேஸ் குறித்து, போலீசார் ஒருவரை கைது செய்து ஜூலை 19ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய வழக்கறிஞர், “இவர் மீது தவறான முறையில் வழக்கு பதிக்கப்பட்டுள்ளது” என நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். மேலும் தற்போது, மாணவியின் தந்தையின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்படுகிறது.