“கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” – இந்த ஒரு கேள்வியால் ஆரம்பித்த தகராறு, ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், சடலத்திடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் அளவுக்குக் கொண்டு போயிருக்கிறது. இந்தூரில் MBA படித்து வந்த மாணவியைக் கொன்றுவிட்டு, மும்பைக்குத் தப்பியோடிய காதலன் பியூஷை போலீஸ் கைது செய்துள்ளது. விசாரணையில் அவன் சொன்ன விஷயங்கள் போலீசாரையே அதிர வைத்துள்ளது. “கொலை செஞ்சதுக்கு அப்புறம் அவ ஆவியிடம் மன்னிப்பு கேட்க யூடியூப் பார்த்து மாந்திரீகம் செஞ்சேன்” என அவன் கொடுத்துள்ள வாக்குமூலம் இது ஒரு சாதாரணக் கொலை அல்ல, ஒரு ‘சைக்கோ’ தனமான குற்றம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அந்தப் பெண் வேறொருவருடன் பேசுகிறார் என்ற சந்தேகத்திலும், திருமணத்திற்கு மறுத்த ஆத்திரத்திலும் இந்தக் கொடூரத்தைச் செய்ததாகக் காதலன் ஒப்புக்கொண்டுள்ளான். பிப்ரவரி 13-ம் தேதி அறையிலிருந்து வந்த துர்நாற்றத்தை வைத்தே இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது. பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண்ணின் சடலத்துடன் அவன் உடலுறவு கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது போலீஸ் அவனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
