18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது.
இதனைத் தொடர்ந்து வீரர்கள் பெங்களூரு நகரில் ஊர்வலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சின்னசாமி மைதானத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்களின் கூட்டம் அலை மோதுவதால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் நிலையில் வெளியே கூட்ட நெரிசல் அலை மோதுகிறது. முதலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த கூட்டம் நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது, இந்த துயரமான நேரத்தில் பெங்களூரு மக்களுடன் நான் நிற்கிறேன். எந்த ஒரு கொண்டாட்டமும் உயிரை விட முக்கியமில்லை. கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்தது என் மனதை நொறுக்கியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கர்நாடக அரசு அனைத்து ஆதரவையும், நிவாரணத்தையும் தர வேண்டும் என கூறியுள்ளார்.
