தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புவனகிரியில் நிஹாரிகா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயது இருக்கும்போது தந்தை இறந்து விட்டார். அவரது தாய் மறுமணம் செய்துவிட்டார். பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை நிஹாரிகா திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். பின்னர் இன்னொருவரை திருமணம் செய்து அவரிடமிருந்தும் விவாகரத்து வாங்கினார். நிஹாரிகா மோசடி குறித்து இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நிஹாரிகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஜெயிலில் தனக்கு பழக்கமான கைதியின் மகனான ராணா என்பவர் உடன் நிஹாரிக்காவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. அதன் பிறகு பெங்களூரைச் சேர்ந்த கால்நடை டாக்டர் நிகில் ரெட்டி என்பவர் உடனும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. மேலும் ஆன்லைன் திருமண விளம்பரம் மூலம் ஹைதராபாத் சேர்ந்த ரியல் ஸ்டேட்டஸ் குமார் என்பவரிடமும் பழக்கம் ஏற்பட்டது. ரமேஷ் குமார் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரமேஷ் நிஹாரிகா பதிவு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இருவரும் போச்சாவரத்தில் வீடு எடுத்து குடும்பம் நடத்தினர். கேட்டபோதெல்லாம் ரமேஷ் குமார் அவருக்கு பணம் கொடுத்துள்ளார். இதற்கிடையே நிஹாரிகா பெங்களூரு சென்று தனது கள்ளக்காதலர்களை சந்தித்து வந்தார். இதனை பற்றி கேட்டபோது நிஹாரிக்காகவுக்கும் ரமேஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நிஹாரிகா ரமேஷ் குமாரிடம் எட்டு கோடி ரூபாய் பணம் கேட்டார். ஆனால் ரமேஷ் குமார் பணத்தை கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த நிஹாரிகா ராணாவை வரவழைத்து மது குடித்து மயங்கி கிடந்த ரமேஷ் குமாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

இது பற்றி கர்நாடகாவில் இருக்கும் கள்ளக்காதலனான நிகில் ரெட்டிக்கும் நிஹாரிகா தகவல் தெரிவித்தார். மூவரும் ரமேஷ் குமாரின் உடலை காரில் வைத்துக் கொண்டு 800 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளனர் பின்னர் சுண்டிகுப்பாவில் இருக்கும் காபி தோட்டத்திற்கு சென்று ரமேஷ் குமாரின் உடலை துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து நிஹாரிக்காவிடம் விசாரணை நடத்திய போது முழு உண்மையும் தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிஹாரிகா மற்றும் அவரது கள்ளக்காதலர்களை போலீசார் கைது செய்தனர்.