
சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு உடலில் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சேலையூர் இந்திரா நகரை சேர்ந்த சூர்யா(20) என்பது தெரியவந்தது.
அவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு பிறவியிலேயே காது கேட்காது. வாய் பேச முடியாது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சூர்யா குடிபோதையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை யாராவது கொலை செய்தார்களா? கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.