மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயது இளம்பெண், தனது ஆண் நண்பனுடன் போப்தேவ் காட் பகுதியில் நள்ளிரவில் இருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வழிமறித்தது. இளம் ஆணை சட்டையும் பெல்டையும் பயன்படுத்தி மரத்தில் கட்டி வைத்துவிட்டு, மூவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர்.

சம்பவம் இரவு 11 மணிக்கு நடந்தபோதும், பாதிக்கப்பட்ட இளம்பெண் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு போலீசாரிடம் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையை அமைத்து தேடிவருகின்றனர்.

போலீசார், மூவரில் இருவரின் பென்சிலால் வரைந்த படங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் சந்தேகப்படுகிற நபர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். குற்றவாளிகளை விரைவில் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அந்த பெண்ணின் ஆண் நண்பரை மரத்தில் சட்டையாலும் பெல்டாலும் கட்டி வைத்துவிட்டு அவரின் கண் முன்னே இளம்பெண்ணை மூவரும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.