தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் ஆதவ் அர்ஜுனா, “ரஜினிக்கு இல்லாத மனவலிமை விஜய்க்கு இருக்கிறது” எனப் பேசியது இப்போது ஒரு பெரிய போராக மாறியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் எஸ்.வி.சேகர், விஜய்யை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். “முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோதே அவர் முன்னிலையில் சொடுக்கு போட்டுப் பேசியவர் ரஜினி; கருணாநிதி மேடையிலேயே ‘எங்களை மிரட்டுகிறார்கள்’ எனச் சொன்னவர் அஜித். ஆனால், உங்கள் தலைவர் (விஜய்) அப்படிப்பட்டவரா? அஜித்தின் கால் தூசுக்காவது உங்கள் தலைவர் வர முடியுமா?” என ஆவேசமாகக் கேட்டுள்ளார்.

​மேலும், விஜய்யின் பழைய சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “ரஜினியும் அஜித்தும் ஒருபோதும் கொடநாடு குளிரில் கைகளைக் கட்டிக்கொண்டு வாசலில் நின்று, ‘எங்கள் படத்தை ரிலீஸ் செய்யுங்கள்’ என பிச்சைக்காரர்களைப் போலக் கேட்டதில்லை. அப்படிப் பிச்சை கேட்ட ஒருவரைத் தலைவராக வைத்துக்கொண்டு, ரஜினியைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?” எனப் போட்டுத் தாக்கியுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த ‘பிச்சைக்காரர்’ என்ற விமர்சனம் மற்றும் கொடநாடு விவகாரம் இப்போது ரஜினி, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய இணையப் போரை உருவாக்கியுள்ளது.