இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் ஏராளமான கடனுதவி திட்டங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது இந்தியாவில் உள்ள நெசவாளர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவும் விதமாக விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலமாக கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்ச ஐந்து சதவீத வட்டியுடன் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் படகு தயாரிப்பாளர்கள் குயவர்கள் சிற்பிகள் கொத்தனார் பொற்கொல்லர் பூட்டு தொழிலாளிகள் மற்றும் செருப்பு தொழிலாளிகள் என ஏராளமான தொழிலாளர்கள் இந்த கடனுதவியை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் முதல் கட்டமாக தொழிலாளிகள் ஒரு லட்சமும் இரண்டாம் கட்டமாக 2 லட்சம் ரூபாய் வரையும் கடனுதவி பெற முடியும். இந்த திட்டம் இன்று செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் ஏழை தொழிலாளிகளின் தொழிலை விரிவாக்கும் வகையில் இந்த கடனுதவி திட்டம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.