கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த முத்து(35) என்பது தெரிய வந்தது. இவரை போலீசார் சோதனை செய்த போது அவரிடம் நாட்டு துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளுடன் வேட்டையாடி வந்தது உறுதியானது.

இதனையடுத்து முத்துவை போலீசார் அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் அதற்கான வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்பு முத்து மீது முன்று பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.