இன்றைய காலகட்டத்தில் செல்பி மோகத்தால் மக்கள் பலரும் விதவிதமாக ரீலிஸ் எடுக்க  தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இளம்பன் ஒருவர் பாட்டு பாடிக்கொண்டே சிகரெட் புகைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அந்த இளம் பெண் கையில் குழந்தையோடு வீடியோவில் காணப்படுகிறார். அந்த குழந்தைக்கு சிகரெட் புகை ஒத்துக்கொள்ளாமல் மூச்சு திணறி இருமல் ஏற்படுகிறது. அப்பொழுதும் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் அழகாக தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பெண் சிரித்துக்கொண்டே வீடியோ எடுக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் தன்னுடைய இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த ரீல் அரக்கர்களிடம் குழந்தைகள் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இது பயங்கர உணர்வை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவு வெளியானது நிலையில் இதை பார்வையிட்ட பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள் .இதை பார்த்த பலரும் இது ஒரு குற்றம். அந்த இளம்பெண்ணின் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், இது முட்டாள் தனத்தின் உச்சம் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.