பாகிஸ்தானில் சீனாவுக்கு சொந்தமான கால் சென்டரை பொதுமக்கள் சூறையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் செக்டார் F-11- ல் ஒரு கால் சென்டர் உள்ளது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி அந்த கால் சென்டரில் மோசமான சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட கால் சென்டர் மூலம் சர்வதேச அளவில் மோசடிகள் நடந்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் 24-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போலி கால் சென்டருக்குள் நுழைந்து பொதுமக்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் என ஏராளமானோர் கணினி, லேப்டாப், கணினியின் இதர பாகங்களை எடுத்துக்கொண்டு வெளியேறுகின்றனர். அந்த வீடியோ வைரலாகி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மோசடி செய்த நிறுவனத்தை சூறையாடுவது தவறல்ல. ஆனால் ரமலான் மாதத்தில் இப்படி செய்வது தவறு என கூறியுள்ளார். மற்றொரு நபர் நான் அந்த இடத்தில் இருந்தால் அனைத்தையும் எடுத்து சென்றிருப்பென். ஆனால் அது தவறான செயல் என கூறியுள்ளார்.