கேரளாவில் வங்கி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை ரேஷன் கடைகளிலேயே மக்கள் பெறும் அடிப்படையிலான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்ஸ் ( K-Stores) என்று அரசு மறு பெயரிட்டுள்ளது. அதோடு பல பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை இந்த கே-ஸ்டோர்களில் மக்கள் பெறும் விதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் பொது விநியோக அமைப்பை வலுப்படுத்தும் அடிப்படையில் ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்களாக மாற்றும் திட்டத்தை கேரள அரசானது மேற்கொண்டுள்ளது. இதன் வாயிலாக ரேஷன் கடைகள் மீதான மக்களின் பிம்பம் மற்றும் முகத்தை மாற்றும் முயற்சியாக அமையும் என்று அரசு தெரிவித்து உள்ளது.