இந்தியாவில் தற்போது  சமையல் எரிவாயு  சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவிற்கு சிலிண்டர் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அரசு தரப்பில் இருந்தும் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் சிலர் ஒரு சிலிண்டர் காலியானவுடன் மற்றொரு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. அதாவது பாரத் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய நினைப்பவர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

https://my.ebharatgas.com/bharatgas/Home/Index. என்ற வெப்சைட்டில் சென்று quick book & pay என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் உள்ளே சென்றவுடன் சிலிண்டர் ஐடி நம்பர் மற்றும் மொபைல் நம்பரை பதிவிட்டு கேப்சா குறியீட்டையும் உள்ளிட்டு continue கொடுக்க வேண்டும். பேடிஎம் மொபைல் ஆப்பிலேயே சிலிண்டர் புக்கிங் வசதியும் இருக்கிறது. பேடிஎம் ஆப் ஓபன் செய்து book gas cylinder என்ற வசதியில் சென்று சிலிண்டர் ஐடி நம்பர் மற்றும் மொபைல் நம்பர் பதிவிட்டு புக்கிங் செய்து கொள்ளலாம். பணம் செலுத்தும் முறையும் இதில் மிகவும் எளிதாக இருக்கும். அதே போல் பேடிஎம் போலவே ரீசார்ஜ் மொபைல் ஆப்பிலும் சிலிண்டர் புக்கிங் செய்து கொள்ளலாம். Book a cylinder ஆப்ஷனில் சென்று நீங்கள் சிலிண்டர் வாங்கும் ஏஜென்சியை தேர்ந்தெடுத்து மொபைல் நம்பரை கொடுத்து பேமெண்ட் செய்தால் சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும்.

எஸ்.எம்.எஸ்

முதலில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் நம்பரை சிலிண்டர் நிறுவனத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த நம்பரில் இருந்து தான் புக்கிங் செய்து கொள்ள முடியும். கேஸ் வாங்கும் நிறுவனத்தின் பிரத்தியேகமான மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலமாக சிலிண்டரை புக்கிங் செய்து கொள்ளலாம்.

இண்டேன்- 7718955555

பாரத்-7715012345,7718012345

HP- 9964023456

மிஸ்டு கால்

மிஸ்டு கால் மூலமாக கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதுதான் மிகவும் ஈஸியான முறையாக இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து கேஸ் நிறுவனத்தின் எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தாலே சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்டு விடுகிறது. அதன் பின் இரண்டு நாள் முதல் ஒரு வாரத்திற்குள் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. அந்த சிலிண்டருக்கான  பணத்தை டெலிவரி மேனிடம் கொடுத்தால் போதும்.

ஆப்தான் பெஸ்ட்

தற்போதைய நிலையில் சிலிண்டர் புக்கிங் செய்ய நிறைய வழிகள் இருந்தாலும் மொபைல் ஆப் மூலமாகவே புக்கிங் செய்வதை நிறைய பேர் விரும்புகின்றனர். ஏனென்றால் பணம் செலுத்துவது இதில் எளிதாக இருக்கிறது. அதே போல் டெலிவரி மேன்களுக்கு அதிகம் கொடுக்க வேண்டிய பிரச்சனையும் இதில் இருக்காது.