எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குஷித் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நிதிஷ்குமார் இந்திய ஒற்றுமை யாத்திரை நல்லதொரு வெற்றி பெற்றது. அவர்கள் அத்துடன் நிறுத்தி விடக்கூடாது என காங்கிரசுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் எதிர்க்கட்சி கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும் அது சரியாக நடந்தால் தற்போது மக்களவையில் 300க்கு மேற்பட்ட இடங்களை பெற்று தனி பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவை அடுத்த தேர்தலில் 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என கூறியுள்ளார்,